இடுகைகள்

கடைவிழியால் சிறையெடுத்தாள்

  கும்பகை இயற்கை அன்னையின் அழகில் விளைந்த நாடு.தாரகை ஆறும், அதன் சுரப்பிடமாய் மகத மலையின் மஞ்சனத்தி அருவியும்  அந்த நாட்டையே செல்வ செழிப்போடு செழிக்கச்செய்தது.நன்செய் நிலங்கள் பச்சை பசேலென்று முப்போகமும் விளைந்து காணப்பட்டது.மா,பலா,வாழை ஆகிய முக்கனியும் விளையும் தோட்டங்கள் விசாலமாய் விரிந்திருந்தது . வறுமையற்ற நாடாகவும் வளமையான நாடாகவும் திகழ்ந்தது கும்பகை.அந்நாட்டு மக்கள் குறைகளின்றி வாழ்ந்தனர்.மன்னன் தனஞ்செழியன் கும்பகையை நல்லாட்சி புரிந்து வந்தார். தங்கமும்,வைரமும்,வைடூரியமும் பதிக்கப்பட்ட அரண்மனையும்,பஞ்சமற்ற மக்களையும் பார்க்கும்பொழுது அந்த நாட்டின் செல்வசெழிப்பு புலப்பட்டது.அமைச்சர் திவ்யரங்கன் நல்ல ஆலோசனை மன்னருக்கு வழங்குவதில் வல்லவர். வந்தோர்க்கு வயிறார புசிக்க கழனியில் விளைந்த கைக்குத்தல் அரிசியும்,தோட்டத்தில் விளைந்த பல வகையான காய்கறிகளும் சாம்பார்,கூட்டு,பொரியலோடு எந்தகாலகட்டத்திலும் அரண்மனை அருகே இருக்கும் அன்னதானமண்டபத்தில் விருந்தோம்பல் அயராது நடந்துகொண்டிருக்கும்.அத்தகைய மன்னன் தானம்,தர்மங்களிலும் எளிமையானவரல்ல வாரி கொடுக்கும் பாரி வள்ளல் .அவரின்  நீதியும்,வீரமும்,க